Saturday, October 1, 2011

அமரன் !!


அகிலமதில்,
ஆயிரமாயிரம் 
ஆண்களிடையில்,

தொலைத்துவிட்டேன் அவனை !

அருகிருந்தும் 
அனைத்தும் என்னில் 
அறிந்திருந்தும் 
அன்பால் தினமும் 
அணைத்திருந்தும்,

தொலைத்துவிட்டேன் அவனை !

அலைக்கடலில் 
அகப்பட்ட 
அருந்துகளாய் 
அரை நொடியில் 

தொலைத்துவிட்டேன் 
என் ஆண் மகனை !

அண்மையில் அமர்ந்திருந்து - என்
பெண்மையில் பூப்பூத்தவனின்
கண்கள் கண்ணீர்
கொண்டிருந்தும்

தொலைத்துவிட்டேன் அவனை !


இயற்கையாய் அன்பொன்றை
இதயவறையில் 
இல்லறம் செய்வித்த 
இனியவனை,

இளமையின் ஊசலாட்டத்தில் 
இதயமது இடம் மாற,
செல்வத்தில் 
பிறந்தவன் கண்டு 
கண்களது குருடாக,

தொலைத்துவிட்டேன் 
அரிய ஆண் மகனை !

உள்ளத்தில் 
உயிர் வாழும்
உந்தன்
நினைவுகள் ஜபிக்கிறது !

தொலைத்துவிட்டாலும் 
நீ என்றுமே 
என் அன்பின் அமரன்  என்று ! 

No comments:

Post a Comment