தூது!!!
செப்பாத சொல்லின்
கோடி அர்த்தங்களை
மௌனம்
பேசி விடுகிறது!!
கூறா மொழிகளின்
கூற்றற்ற மௌனத்தின்
கூக்குரல் இசையை
இரு விழிகள்
இசை(மை)த்து விடுகின்றன!!
மௌனம் பேசாத,
இரு விழிகள் இசைக்காத
இன்னும் புரியாத
எண்ணங்களை
சொல்வதற்கு - நான்
அனுப்பும் தூதே
கண்ணில்
கரை தேடும்
No comments:
Post a Comment