Thursday, October 27, 2011
Saturday, October 1, 2011
அமரன் !!
அகிலமதில்,
ஆயிரமாயிரம்
ஆண்களிடையில்,
தொலைத்துவிட்டேன் அவனை !
அருகிருந்தும்
அனைத்தும் என்னில்
அறிந்திருந்தும்
அன்பால் தினமும்
அணைத்திருந்தும்,
தொலைத்துவிட்டேன் அவனை !
அலைக்கடலில்
அகப்பட்ட
அருந்துகளாய்
அரை நொடியில்
தொலைத்துவிட்டேன்
என் ஆண் மகனை !
அண்மையில் அமர்ந்திருந்து - என்
பெண்மையில் பூப்பூத்தவனின்
கண்கள் கண்ணீர்
கொண்டிருந்தும்
இயற்கையாய் அன்பொன்றை
இதயவறையில்
இல்லறம் செய்வித்த
இனியவனை,
இளமையின் ஊசலாட்டத்தில்
இதயமது இடம் மாற,
செல்வத்தில்
பிறந்தவன் கண்டு
கண்களது குருடாக,
தொலைத்துவிட்டேன்
அரிய ஆண் மகனை !
உள்ளத்தில்
உயிர் வாழும்
உந்தன்
நினைவுகள் ஜபிக்கிறது !
தொலைத்துவிட்டாலும்
நீ என்றுமே
என் அன்பின் அமரன் என்று !
Friday, September 30, 2011
அவள்!
கண்கள் -
கவிதைகளின் கதை கூடம்!
கூந்தல் -
கருமை நிறத்திலொரு நயாகரா!
கண்ணம் -
மலர்கள் உறங்கும் மென்படுக்கை!
உதடு -
உயிரை உருக்கும் செந்தகடு!
செவிகள் -
சமுத்திரம் சொக்கிப்போகும் கடற்குதிரை!
கழுத்து -
தேன் உமிழும் தங்கக்கிண்ணம்!
இடை -
ஸ்வரங்கள் வாசிக்கும் வீணை!
பாதம் -
புவியை உறவாடும் மேகங்கள்!
அவள் -
என் ஆறடி ஆளும் அன்பதிசயம்!
நீ , நினைவுகள் !!
அலாரத்தின் அலறல்
அடி மனதில் உன் சிரிப்பு !!
கொஞ்சும் மழை
கொஞ்சம் தேனீர்
கொறிக்க உன் நினைவுகள் !!
இதமாய் குளியல்
இடையிடை என்னிசை
இறுதியில் ஈரம் துடைக்க உன் சேலை !!
வெட்ட வெயில்
வெந்திடும் வியர்வை
பெரு மூச்சில் உன் சூடு !!
எந்தன் நாட்குறிப்பு
உந்தன் பக்கங்கள்
உன் கதை செதுக்கும் என் பேனை !!
உட்செல்லும் உன் காற்று
உயிர் தொடும் ஸ்பரிஷம்
நான் சுவாசிக்கும் உன் சுவாசம் !!
வாழ்வில் உன் நாட்கள்
இதயத்தில் உன் துடிப்பு
மொத்தமாய் உன் நினைவுகளுடன் நான் !!
Subscribe to:
Posts (Atom)



